Reliable Software
www.garudabazaar.com

பிரபல விஜய் டிவி நடிகருக்கு டிவின்ஸ் குழந்தைகளா?... கண்ணை கவரும் பிறந்தநாள் கொண்டாட்டம்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகராகவும், பிரபல தொகுப்பாளராகவும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறியப்படுபவர் பிரஜின். அவர் நடித்த காதலிக்க நேரமில்லை, சின்னத்தம்பி தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். மேலும் பிரஜின், பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட படங்களில் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் பிரபல தொகுப்பாளராக இருந்து வந்த பிரஜின் சின்னத்திரைக்கு வந்த பல நல்ல சீரியல்களில் நடித்து பெயர் பெற்றார். அதன்பிறகு வெள்ளித்திரையில் தனது பயணத்தை துவங்கினார். ஆனாலும் சின்னத்திரை அளவிற்கு அவருக்கு அங்கு வெற்றி கிடைக்காத நிலையில் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பினார்.

actor prajin sandra daughters grand birthdayவிஜய் டிவி நடிகர் வீட்டு கொண்டாட்டம்

சின்னதம்பி சீரியல் முடிவுற்ற நிலையில், அன்புடன் குஷி என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். பிரஜின் பிரபல தொகுப்பாளரும் நடிகையுமான சான்ட்ராவை திருமணம் செய்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்த தம்பதியினருக்கு கடந்த ஆண்டு 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அழகான இரட்டை குழந்தைகள்  பிறந்தது. இவர்களுக்கு  மித்ரா, ருத்ரா என்ற இரட்டை குழந்தைகளுக்கு பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் பிரஜின் மற்றும் சான்ட்ரா தம்பதியினரின் அழகிய இரட்டை குழந்தைகளின் இரண்டாம் பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடியுள்ளார்கள். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags : Prajin, Sandra

actor prajin sandra daughters grand birthdayவிஜய் டிவி நடிகர் வீட்டு கொண்டாட்டம்

People looking for online information on Prajin, Sandra will find this news story useful.