மயில்சாமியின் கடைசிப்படம்.. மயில்சாமியின் நடிப்பில் வெளியான உருக்கமான சிங்கிள் பாடல்..!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் மயில்சாமி, 57 வயதான நிலையில் கடந்த மாதம் மாரடைப்பால் காலமானார்.

நடிகர் மயில்சாமி, பல தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர். மெமிக்ரி கலைஞராகவும் புகழ் பெற்றவர்.
1984-ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடித்து வந்த நடிகர் மயில்சாமி, கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்டவர். 2000- காலகட்டத்தில் நடிகர் விவேக் & வடிவேலு ஆகியோருடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் மயில்சாமி பிரபலமானார்.
தவிர, காமெடி டைம், டைமுக்கு காமெடி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடிகர் மயில்சாமி தொகுத்து வழங்கியுள்ளார்.
நடிகர் மயில்சாமிக்கு இரண்டு மகன்கள் (அன்பு, யுவன்) உள்ளனர். மூத்த மகன் அன்பு (அருமை நாயகம்) 'அல்டி' என்ற படத்தில் நடித்தவர். கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. கடந்த 2021 ஆம் ஆண்டு சிதம்பரம் ரயில்வே கேட் என்ற படத்திலும் அன்பு நடித்திருந்தார்.
இளைய மகன் யுவன், பா. ரஞ்சித் தயாரிப்பில் தண்டகாரண்யம் எனும் படத்தில் நடித்து வருகிறார். 2016 ஆம் ஆண்டு வெளிவந்த 'என்று தணியும்', சத்யராஜ் நடித்த 'தீர்ப்புகள் விற்கப்படும்' படங்களில் யுவன் மயில்சாமி நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் மயில்சாமி, கடைசியாக நடித்த கிளாஸ்மேட்ஸ் படத்தின் முதல் சிங்கிள் பாடல் 'கண்ணு முன்னே' வெளியாகி உள்ளது. இந்த பாடலை பாடகர் ஶ்ரீனிவாஸ் பாடியுள்ளார். பிரித்வி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சீர்காழி சிற்பி பாடல் வரிகளை எழுதி உள்ளார். சரவண சக்தி இந்த படத்தினை இயக்கி உள்ளார்.
மயில்சாமியின் கடைசிப்படம்.. மயில்சாமியின் நடிப்பில் வெளியான உருக்கமான சிங்கிள் பாடல்..! வீடியோ