www.garudabazaar.com
iTechUS

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மனோபாலா .. என்ன ஆச்சு‌.? வெளியான தகவல் ‌

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் மனோபாலா. பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்த மனோபாலா, ஆகாய கங்கை திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகி இருந்தார்.

Actor Manobala admitted in hospital photos viral on social media

இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களையும் இயக்கியிருந்த மனோபாலா, சிறந்த இயக்குனர் என்ற பெயரையும் எடுத்திருந்தார்.

இதனையடுத்து, சின்னத்திரை தொடர்களையும் மனோபாலா இயக்கி வந்த ஒரு சூழலில் கே. எஸ். ரவிக்குமாரின் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து இன்று ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், காமெடி ரோல்களிலும் மனோபாலா நடித்து வருகிறார்.

இயக்குனர் என்ற இடத்தில் இருந்து நடிக்க ஆரம்பித்த மனோபாலாவின் காமெடி காட்சிகள், பெரிய அளவில் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. நடிப்பு, இயக்கம் மட்டுமில்லாமல் சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மனோபாலா மாறி இருந்தார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மனோ பாலா அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது நலமுடன் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் சங்க தலைவர் பூச்சி முருகன் நடிகர் மனோபாலாவை நேரில் சென்று நலம் விசாரித்தது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. நடிகர் மனோபாலா விரைவில் குணமாகி மீண்டும் சினிமாவில் நடிக்க வர வேண்டும் என்று குறிப்பிட்டு பலரும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Tags : Manobala

தொடர்புடைய இணைப்புகள்

Actor Manobala admitted in hospital photos viral on social media

People looking for online information on Manobala will find this news story useful.