பிறந்து 9 நாள்தான் ஆகுது.. இன்னைக்கு ஹார்ட் சர்ஜரி - நடிகர் லாரன்ஸ் எமோஷனல் பதிவு.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு எமோஷலான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் ஹீரோவாகவும் இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவரின் காஞ்சனா படத்திற்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும் இவர் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார். சினிமா மட்டுமின்றி நலத்திட்ட உதவிகள் செய்வதிலும் இவர் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு எமோஷனல் சம்வத்தை பகிர்ந்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ''பிறந்து 9 நாள் மட்டுமே ஆன குழந்தைக்கு இன்று ஹைதராபாத்தில் இதய அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. இன்னும் அக்குழந்தைக்கு பெயர் கூட வைக்கவில்லை. இந்த நேரத்தில் டாக்டர்களை கண்டிப்பாக பாராட்டி ஆக வேண்டும். மேலும் பணத்தை தாண்டு, அனைவரின் பிரார்த்தனைகளும் தேவை. இந்த குழந்தைக்காக அனைவரும் ஒரு நிமிடமாவது வேண்டுக்கொள்ளுங்கள்'' என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் தற்போது, குழந்தைக்கு நல்லமுறையில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்து, நலமாக இருப்பதாக பதிவிட்டுள்ளார். மேலும், 72 மணி நேரங்களுக்கு பின்னர் குழந்தையின் புகைப்படத்தை வெளியிடுவதாக அவர் கூறியுள்ளார். மேலும் இதற்கு காரணமான மருத்துவர்கள், தயாரிப்பாளர் புல்லா ராவ், மேனஜர் ராமகிருஷ்ணா மற்றும் குழந்தைக்காக வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நடிகர் லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
— Raghava Lawrence (@offl_Lawrence) April 24, 2020