www.garudabazaar.com

BREAKING: அடுத்தது என்ன? நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தின் புதிய அப்டேட்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தியின் 22வது படம் சர்தார் ஆகும்.

actor karthi sardar movie latest shooting update

கடைசியாக கார்த்தி நடிப்பில் சுல்தான் படம் திரை அரங்கில் வெளியானது. அதனைத் தொடர்ந்து கார்த்தி, பொன்னியின் செல்வன் படபிடிப்பிலும், சர்தார் படத்தின் படப்பிடிப்பிலும் நடித்து வருகிறார்.

actor karthi sardar movie latest shooting update

சர்தார் படத்தின் ஆரம்ப படப்பிடிப்பு சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. பின்னர் கொரோணா காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் சில தினங்களுக்கு முன்பு சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்றது. இதற்கிடையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் கார்த்தி கலந்து கொண்டார். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் மகேஸ்வர், ஆர்ச்சா, குவாலியர் நகரில் நடந்து வந்தது.

actor karthi sardar movie latest shooting update

இந்நிலையில் சர்தார் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் துவங்குகிறது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்குகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் மோஷன் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. மேலும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்‌. ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

actor karthi sardar movie latest shooting update

People looking for online information on Karthi, Raashi kanna will find this news story useful.