ஹிப்பாப் ஆதி நடிக்கும் "அன்பறிவு" படத்தின் அடுத்த அப்டேட்! ஷூட்டிங் எந்த நாட்டில் தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்ஹிப்பாப் தமிழா ஆதி இசையமைப்பாளராக இருந்து இயக்குனர், நடிகராக உயர்ந்தவர். கடைசியாக நான் சிரித்தால் படத்தில் நடித்து இருந்தார். தற்போது சத்ய ஜோதி தயாரிப்பில் "சிவக்குமாரின் சபதம்" படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்தப்படம் திரைக்கு வர இருக்கிறது.
![actor hiphop aadhi anbariv movie latest update actor hiphop aadhi anbariv movie latest update](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/actor-hiphop-aadhi-anbariv-movie-latest-update-photos-pictures-stills.jpg)
தற்போது ஆதி, சத்ய ஜோதி தயாரிப்பில் அட்லியின் உதவியாளர் அஸ்வின் ராம் இயக்கும் அன்பறிவு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் முதல் லுக் டீசர் வெளியாகியது. இதில் ஆதியுடன் விதார்த், நெப்போலியன் மற்றும் ஊர்வசி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் முதல்முறையாக ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக நம்பந்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை காஷ்மீரா இதில் கதாநாயகியாக நடிக்கிறார்.
முதல் கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்றது, இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த இறுதிக்கட்ட படப்பிடிப்பு நாளைமுதல் சோவியத் நாடான அஜர்பைஜானில் நடைபெறுகிறது என நம்பந்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளது.