www.garudabazaar.com

மாரடைப்பினால் அவதிப்படும் பிரபல நடிகர் பெஞ்சமின்... உதவி கோரி வெளியிட்ட உருக்கமான வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் அறியப்பட்ட காமெடியனாக வலம் வருபவர் நடிகர் பெஞ்சமின். இவர் முதன்முதலில் 2004-ஆம் ஆண்டு வெளிவந்த இயக்குனர் சேரனின் 'ஆட்டோகிராப்' படத்தில் அறிமுகமானவர். அதன் பிறகு தளபதி விஜய்யுடன் 'திருப்பாச்சி' படத்தில் அவருக்கு நண்பராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்குப் பிறகு வசூல்ராஜா, அருள், வேங்கை போன்ற பல படங்களில் அவர் நடித்துள்ளார். தனது குணச்சித்திர நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்தில் இவர் வல்லவர்.

actor benjamin pleads for mediacl help அவதிப்படும் பிரபல நடிகர் பெஞ்சமின்

இந்நிலையில் நடிகர் பெஞ்சமின் தற்போது உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சமீபத்தில் 'ஹார்ட் அட்டாக்' ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலம் மருத்துவமனையில் இருந்த அவர் மருத்துவ வசதிகள் காரணமாக பெங்களூரு மருத்துவமனைக்கு  மாற்றப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் பெஞ்சமின் வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோவில் "பெங்களூரு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கிறேன். எவ்வளவு செலவாகும் என்று தெரியவில்லை. நண்பர்கள் உங்களுக்கு தெரிந்த மருத்துவ வசதி செய்து தரக்கூடிய அன்பர்களிடம்  சொல்லி ஏதாவது மருத்துவ வசதிகள் பெற்று தரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று உருக்கமாக கூறியுள்ளார்"

மாரடைப்பினால் அவதிப்படும் பிரபல நடிகர் பெஞ்சமின்... உதவி கோரி வெளியிட்ட உருக்கமான வீடியோ..! வீடியோ

Tags : Benjamin

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

actor benjamin pleads for mediacl help அவதிப்படும் பிரபல நடிகர் பெஞ்சமின்

People looking for online information on Benjamin will find this news story useful.