www.garudabazaar.com

பிக்பாஸ் வீட்டுக்குள் அடுத்த 'எண்ட்ரி' இவரா?... 'தீயாய்' பரவும் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டின் ராசி நம்பர் 16 போல. ஒரு வாரம் கூட அந்த எண்ணிக்கை குறையாதவாறு பார்த்து கொள்கின்றனர். ரேகா வீட்டைவிட்டு வெளியேறிய உடன் அர்ச்சனா எண்ட்ரி கொடுத்தார். இரண்டாவது போட்டியாளரான வேல்முருகன் கடந்த வாரம் வெளியேறிய உடன் சுசித்ரா எண்ட்ரி கொடுத்தார். இந்த நிலையில் மீண்டும் ஒரு புதிய போட்டியாளர் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Actor Azeem to enter Bigg Boss Tamil 4 as wildcard entry?

அவரும் விஜய் டிவி பிரபலம் தானாம். பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற நாடகங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பெற்ற மொஹம்மது அசீம் தான் அந்த புதிய போட்டியாளராம். இவர் ஷிவானியுடன் இணைந்து பகல் நிலவு நாடகத்தில் நடித்திருக்கிறார். அதோடு டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றிலும் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர். இருவருக்கும் இடையில் கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாகவும் பேச்சுக்கள் எழுந்தது.

இடையில் என்ன நடந்ததோ ஷிவானி இரட்டை ரோஜா சீரியலுக்கு சென்று விட்டார். இந்த வாரம் ஒரு போட்டியாளரை வெளியேற்றிய கையோடு அசீம் எண்ட்ரி இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. எனினும் இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Actor Azeem to enter Bigg Boss Tamil 4 as wildcard entry?

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.