www.garudabazaar.com

'வலிமை' படத்தில் நடிகர் அஜித் பயன்படுத்திய கையுறை.. ஏலத்தில் எடுத்த ரசிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகர் அஜித்குமார் 'வலிமை' படத்தில் பயன்படுத்திய கையுறையை அஜித்குமாரின் ரசிகர் ஒருவர் ஏலத்தில் எடுத்துள்ளார்.

Actor Ajith's autographed glove was auctioned off by a fan

நடிகர் அஜித்குமார் - "KING OF OPENING"

நடிகர் அஜித்குமார், தமிழ் சினிமாவில் தனக்கென தனிப்பாதையும், தனி இடத்தையும் பிடித்த முன்னணி நடிகர்களில் முதன்மையானவர். தமிழகம் மட்டுமல்லாது நடிகர் அஜித்குமாருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவருடைய படங்களுக்கு முதன் நாளில் கூடும் ரசிகர்களுக்காகவே "KING OF OPENING" என்று அழைக்கப்படுபவர்.  நடிகர் அஜித்குமார் சினிமா மட்டுமல்லாமல், F2 ரேஸிங், துப்பாக்கி சுடுதல், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏரோ மாடலிங் துறை சிறப்பு பேராசிரியர் என பல துறைகளில் ஆதிக்கம் செலுத்துபவர். சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் நடிகர் என்று பலராலும் பாராட்டப்படுபவர். குறிப்பாக இவரின் ரசிகர் மன்றங்கள் கலைப்பு, 'தல' என்கிற அடைமொழியை சமீபத்தில் துறந்தது, ரசிகர்களை முதலில் குடும்பங்களை கவனிக்க சொன்னது என இவற்றில் ஏராளம் உண்டு.  

Actor Ajith's autographed glove was auctioned off by a fan

KIndness Foundation

நடிகர் அஜித்தின் பெற்றோரான, மோகினி - சுப்ரமணியம் ஆகியோரின் பெயரில் மோகினி மணி எனும் அறக்கட்டளை மூலம் நடிகர் அஜித், உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவுவது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் KIndness Foundation-னுக்காக நடிகர் அஜித்தின் ஆட்டோகிராப் இட்ட கையுறை பள்ளிக்குழந்தைகளின் நலனுக்காக கடந்த 2021 மார்ச் மாதம் ஏலம் விடப்பட்டது. இந்த ஆட்டோகிராப் இட்ட கையுறையை, நடிகர் அஜித்தின் ரசிகர் பெங்களூரைச் சாந்த சூர்யா என்பவர் ஏலத்தில் எடுத்துள்ளார்.

Actor Ajith's autographed glove was auctioned off by a fan

அஜித் ரசிகரின் பதிவு

இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித் ரசிகர் சூர்யா பதிவிட்டுள்ளார், அதில் "இதை இடுகையிட கிட்டத்தட்ட ஒரு வருடம் காத்திருந்தேன்... இந்த ரைடிங் கையுறைகள் இந்திய சினிமாவின் மிகப் பெரிய நடிகர்களில் ஒருவரும், முன்னாள் F2 பந்தய வீரருமான தல அஜித் குமாருக்கு சொந்தமானது. சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து ஒரு நல்ல காரணத்திற்காக ஏலத்தில் கலந்துகொண்டு இதைப் பெற்றேன். இறுதியில், என்னால் இதில் வெற்றி பெற முடிந்தது. அஜித் சார் தற்போது உலக பைக் பயணத்தில் பிஸியாக இருப்பதால், பின்னர் இந்த மாதத்திற்குள் எனக்கு போன் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். நடிகர் அஜித்தின் இந்த ஒற்றை நினைவுச்சின்னத்தின் உரிமையாளர் நான் என்று சொல்வதில் நான் மிகவும் பெருமையாகவும் அதிர்ஷ்டமாகவும் உணர்கிறேன். இதை என்னிடம் வாங்க பல தரப்பினரும் லட்சக்கணக்கில் பணம் கொடுக்க முன்வந்தனர். ஆனால் பணத்தை விட இது எனக்கு அதிக மதிப்புடையது என்பதால், எல்லா சலுகைகளையும் நிராகரித்தேன். சமீபத்தில் வெளியாகவிருக்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் "வலிமை" படத்திலும் அதே கையுறைகளை அஜித் சார் பயன்படுத்தியிருக்கிறார் என்பது எனக்கு தெரிந்தது. இது டிரெய்லரிலும் காணப்பட்டது, இது மிகவும் விரும்பப்பட்ட டிரெய்லராக தற்போது மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது". என கூறியுள்ளார்.

Actor Ajith's autographed glove was auctioned off by a fan

Actor Ajith's autographed glove was auctioned off by a fan

வலிமை

'வலிமை' படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு (13.01.2022) வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Actor Ajith's autographed glove was auctioned off by a fan

தொடர்புடைய இணைப்புகள்

Actor Ajith's autographed glove was auctioned off by a fan

People looking for online information on Ajith Kumar, Auction, Autograph, அஜித்தின் ஆட்டோகிராப், Gloves, Kindness Foundation, King of Opening, Valimai will find this news story useful.