www.garudabazaar.com

சத்தியமா 'குரூப்பிஸம்' கெடையாது பாஸ் நம்புங்க... கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் கன்பெக்ஷன் ரூமுக்கு எல்லாம் வர வேண்டாம் இங்கேயே ஓபனாக நாமினேஷன் செய்யுங்கள் என போட்டியாளர்களுக்கு அன்பாக கட்டளையிட்டார். மேலும் தன்னைத்தானே யாரும் நாமினேட் செய்துகொள்ள கூடாது என்றும் பிக்பாஸ் கூறிவிட்டார். (பாலாஜி நேற்று முன்தினம் தன்னைத்தானே சொல்லிக்கொண்டதால் முன்னெச்சரிக்கை போல)

Aari Arjunan and Anitha again came to Nomination list

இதையடுத்து அனைவரும் இரண்டு பேரை நாமினேட் செய்தனர். இந்த நாமினேஷன் பட்டியலில் ஆரி, அனிதா, ரியோ, ஆஜீத், அர்ச்சனா, சோம், ஷிவானி ஆகியோர் இடம்பிடித்து உள்ளனர். வீட்டின் தலைவர் என்பதால் இந்த வார நாமினேஷன் பட்டியலில் ரம்யா இடம்பெறவில்லை.  இதேபோல 1 வாக்கு மட்டும் என்பதால் பாலாஜியும் இந்த லிஸ்டில் வரவில்லை.

கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெற்று இருப்பதால் இந்த வாரம் யார் வீட்டைவிட்டு வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நாமினேஷனில் அர்ச்சனா, ரியோ, கேப்ரியலா மற்றும் சோம் ஆகிய நால்வரும் ஒன்று சொன்னது போல ஆரி, அனிதா, ஷிவானி ஆகிய மூவரையும் நாமினேட் செய்தனர். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இதுக்கு பேரு குரூப்பிஸம் கெடையாது நம்புங்க என கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Aari Arjunan and Anitha again came to Nomination list

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.