www.garudabazaar.com

Video: 'ஹார்ட்' சிம்பலை வைத்து கேள்வி கேட்ட ஆரி... 'சைலண்ட்' கில்லர்னு நிரூபித்த ரம்யா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த சீசன்ல இதுவரைக்கும் லவ் டிராக் வரலையே என ரூம் போட்டு யோசித்த ரசிகர்களுக்கு செம ஆச்சரியம். ஆமாம். பாலாஜிக்கு, ஷிவானி ஐஸ்கிரீம் ஊட்டிய வீடியோவை பார்த்து இந்தா வந்துருச்சுப்பா என குதூகலம் அடைந்துள்ளனர். அப்போ இவங்க தானா? ரெண்டு பேருக்கும் சேர்த்து என்ன பேரு வைக்கலாம்? என தீவிரமாக டிஸ்கஸ் செய்து வருகின்றனர்.

Aari and Ramya Pandian talks about Balaji, Shivani

இந்த நிலையில் வீட்டுக்குள்ளும் இதுகுறித்து தெரிந்து விட்டது போல. கிச்சனில் தனியே இருக்கும் ரம்யாவிடம் எனக்கு ஒரு விஷயம் தெரிய வந்துச்சு அது உண்மையானு தெரியணும் என ஆரி சொல்கிறார். பதிலுக்கு ரம்யா என்னவென்று கேட்க, ஹார்ட் சிம்பல் காட்டி பாலாஜி-ஷிவானி லவ் பண்றாங்க போல என ஆரி கூறுகிறார். மேலும் தான் துப்பறிந்த விதம் குறித்தும் அவர் விளக்க, பதிலுக்கு ரம்யா ரெண்டு பேரும் வாக்கிங் போறாங்கன்னு தெரியும் என்கிறார்.

அவர்கள் இருவரும் தனியே அமர்ந்து மணிக்கணக்காக பேசுகின்றனர் என ஆரி சொல்கிறார். நைட் லைட் ஆப் பண்ணிட்டு தூங்குறதால எனக்கு இந்த வீட்டுல நடக்குற, சுவாரஸ்யமான சம்பவங்கள் மிஸ் ஆகிருது என ரம்யா அலுத்து கொள்வது போல சொல்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் சைலண்ட் கில்லர் சொல்றது உண்மை தான் போல. கடைசி வரைக்கும் இந்த ரம்யா எதுவும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்கவே இல்லையே என கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Aari and Ramya Pandian talks about Balaji, Shivani

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.