www.garudabazaar.com

அடடே!! கௌதம் மேனன் - சிம்பு படத்துல பிரபல ‘பாவக்கதைகள்’ பட நட்சத்திரமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. 

aangelina abraham joins GVM STR movie வெந்து தணிந்தது காடு

இந்த திரைப்படத்தில் சிம்பு, ராதிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 2010-ஆம் ஆண்டு கௌதம் மேனன் - சிலம்பரசன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் செம்ம ஹிட் அடித்தது.

aangelina abraham joins GVM STR movie வெந்து தணிந்தது காடு

இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணையும் படமான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே இந்த படத்தில் பலரும் இணையக் கூடிய செய்திகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் இன்னொரு நட்சத்திரம் இப்படத்தில் இணைந்துள்ளார். 

aangelina abraham joins GVM STR movie வெந்து தணிந்தது காடு

ஆம், நெட்ஃபிளிக்ஸில் வெளியான பாவக்கதைகள் திரைப்படத் தொகுப்பில் வெற்றிமாறன், சுதா கொங்காரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் ஆகிய 4 இயக்குநர்கள் 4 திரைப்படங்களை இயக்கியிருந்தனர். இதில் கௌதம் மேனன் இயக்கி நடித்த திரைப்படமும் இடம் பெற்றிருந்தது. அதில் கௌதம் மேனன், சிம்ரன் மற்றும் ஏஞ்சலினா ஆபரஹாம் எனும் குழந்தை நட்சத்திரம் நடித்திருந்தனர். 

aangelina abraham joins GVM STR movie வெந்து தணிந்தது காடு

இதில் குழந்தை நட்சத்திரம் ஏஞ்சலினா ஆபரஹாம் தான் தற்போது கௌதம் மேனன் - சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தில் இணைந்துள்ளதாக சமூக வலைதளத்தின் மூலம் தகவல் உறுதியாகியுள்ளது. 

Also Read: மாஸ் தான்.. ‘விக்ரம்’ படத்தில் இவர் ஒருத்தருக்கு ஜோடியாக 3 நடிகைகளா?. யார் யார் தெரியுமா?

தொடர்புடைய இணைப்புகள்

aangelina abraham joins GVM STR movie வெந்து தணிந்தது காடு

People looking for online information on Gautham Menon, Paava Kadhaigal, PaavaKathaigal, Silambarasan TR, Simbu, Trending, VenthuThaninthathuKaadu, VTK will find this news story useful.