www.garudabazaar.com

பிக்பாஸில் இன்று ரியோவுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. என்ன தெரியுமா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பைனல்ஸ் வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்படும் நபர்களில் ஒருவர் நடிகர் ரியோ ராஜ். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை தொடரில் அறிமுகமானவர். அதன்பிறகு படிப்படியாக உயர்ந்து சரவணன் மீனாட்சி தொடரில் ஹீரோவாக நடித்தார். அதற்கு பிறகு விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.  2019-ஆம் ஆண்டு 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா' என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

a big surprise awaiting for rio ரியோவுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

அடுத்து அவர் 'பிளான் பண்ணி பண்ணனும்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை பானா காத்தாடி புகழ் பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும் பால சரவணன், தங்கதுரை ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெறும் 'பிளான் பண்ணி பண்ணனும்' என்ற பாடலை இன்று படக்குழுவினர் பிக்பாஸ் வீட்டில் வெளியிட உள்ளனர். இந்த பாடலை பிரேம்ஜி பாடியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனான ரியோவுக்கு இது மிகப்பெரிய  இன்ப அதிர்ச்சியாக இருக்க போகிறது என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.

a big surprise awaiting for rio ரியோவுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

People looking for online information on Biggboss4tamil, Rio Raj will find this news story useful.