www.garudabazaar.com

'நீங்க' இதுவரைக்கும் எத்தனை பேர... வெளில 'அனுப்பி' இருக்கீங்க தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறையாக ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. முதலில் ஆரி தொடங்கி வைத்தார். இந்த பட்டியலில் சோம், ஷிவானி, ஆரி, அனிதா, அர்ச்சனா, ரியோ மற்றும் ஆஜீத் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். இதில் ரியோ முறை வந்தபோது அனிதா குறித்து ஒரு விளக்கம் அளித்தார். இதைப்பார்த்த அனைவரும் அவர் அனிதாவை தான் நாமினேட் செய்வார் என நினைத்தனர்.

Big Clash between Rio Raj and Anitha, Twitter reacts

ஆனால் தன்னுடைய விளக்கத்தை பதிவு செய்வதாக கூறிய ரியோ அவரை நாமினேட் செய்யாமல் ஆரி மற்றும் பாலாஜியை நாமினேட் செய்தார். நாமினேஷன் முடிந்தபின் அனிதா இதுகுறித்து ரியோவிடம் விளக்கம் கேட்க முயன்றார். ஆனால் அவர் நிற்காமல் செல்ல என்ன பயந்துட்டு போறீங்க? என கிண்டல் அடித்தார். இதையடுத்து இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர். இதில் அனிதா ஒருமுறை செல்ல முயல என்ன பயமா? என ரியோ கிண்டல் அடித்தார்.

பின்னர் இருவரும் அவரவர் வேலையை பார்த்தனர். கடைசியில் அனிதா, ரியோவிடம் பேச வேண்டும் என சோம் மூலம் சொல்லி அனுப்பி இருவரும் சமாதானம் ஆகினர். விஷயம் அதோடு முடியவில்லை. உங்களை பகைத்து கொண்டதால் தான் சனம் வெளியேறினார் என அனிதா சொல்ல, என்கிட்ட பெரிய லிஸ்டே இருக்கு உன்னால சுரேஷ் சக்கரவர்த்தி, சாம், நிஷா எல்லாரும் வெளியே போய் இருக்காங்க என ரியோ கூறினார்.

இதைக்கேட்ட பாலாஜி, ரம்யா உள்ளிட்டவர்கள் அப்போ நெஜமான செவரு நீங்க தானா? என கிண்டலடித்தனர். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ரியோ உண்மையை சும்மா புட்டுப்புட்டு வச்சுட்டாருப்பா என அவரை பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Big Clash between Rio Raj and Anitha, Twitter reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.