www.garudabazaar.com

அப்டி போடு.. “தல அஜித்தை இயக்க ஆசை”!.. முழு நீள தமிழ் படத்தை இயக்கியுள்ள 12 வயது சிறுவன் பேச்சு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ அண்மையில் வெளியாகி இருந்தது.

12 yrs old director Ashiq Jinu wants to direct Thala Ajith

இதில் தல அஜித்தின் பைக் ரேஸ் - சாகச காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த திரைப்படம் 2022-ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வரவிருக்கிறது. இதனை அடுத்து ரசிகர்கள் இந்த திரைப்படத்துக்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

12 yrs old director Ashiq Jinu wants to direct Thala Ajith

யுவன் ஷங்கர் ராஜா இசையில், விக்னேஷ் சிவன் வரிகளில் இந்த படத்தின் ‘நாங்க வேற மாரி’ எனும் முதல் சிங்கிள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

12 yrs old director Ashiq Jinu wants to direct Thala Ajith

இந்த நிலையில்தான் கேரளாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் தல அஜித்தை இயக்க விரும்புவதாக கூறுகிறார். கேரளாவைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஆஷிக் ஜீனோ.  சினிமாவின் மீதான ஆர்வம் காரணமாக பிடிகா என்கிற குறும் படத்தை இயக்கியுள்ளார்.

12 yrs old director Ashiq Jinu wants to direct Thala Ajith

சிறந்த சமூக விழிப்புணர்வு குறும்படமாக, இப்படம் நல்ல அங்கீகாரம் பெற, இந்த திரைப்படத்தை அடுத்து ‘பசி’ உள்ளிட்ட பல்வேறு குறும்படங்களை இயக்கத் தொடங்கினார்.

12 yrs old director Ashiq Jinu wants to direct Thala Ajith

அவ்வகையில் இவர் லாக்டவுனில் அடுத்தடுத்து ஆறு குறும்படங்களை இயக்கி இருக்கிறார். இந்த குறும்படங்களுக்காக சமூக மற்றும் அரசு சார்ந்த விருதுகளையும் பாராட்டுகளையும் குவித்திருக்கிறார். கொரோனா சமயத்தில் கார்ட்டூன் சேனல் பார்க்கும் வயதில் இந்த சிறுவன் இப்படி குறும்படங்களை இயக்கி, அவற்றுக்காக விருதுகளை குவித்துள்ளார்.

12 yrs old director Ashiq Jinu wants to direct Thala Ajith

அத்துடன் நிற்காமல் தி கொலம்பியன் அகாடமி என்கிற முழு நீள மலையாள படத்தையும் இயக்கிய இவர், அண்மையில் EVA என்கிற ஒரு பெரிய முழு நீள தமிழ் படத்தை தம் 2வது படமாக இயக்கியுள்ளார்.  இப்படத்தின் டிரைலரை வெளியிட்டு, சென்னை பிரஸ் கிளப்பில் இவர் அண்மையில் பேசியுள்ளார்.

12 yrs old director Ashiq Jinu wants to direct Thala Ajith

அப்பொழுது, தான் தல அஜித்தின் மிகப்பெரிய ரசிகர் என்றும், தல அஜித்தை இயக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். 12 வயது சிறுவன் ஒருவர் தல அஜித்தை இயக்க விரும்புவதாகத் குறிப்பிட்டுள்ள இந்த தகவல் பரபரப்பாகி வருகிறது. மேலும் தான் இயக்கவிருக்கும் எதிர்கால திரைப்படத்தில் கண்டிப்பாக மெசேஜ் சொல்லப் போவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

Also Read: சூர்யா படத்துல வந்த மாதிரியே... நிஜமாகவே போதை வழக்கில் சிக்கிய சிங்கம்-2 டேனியின் கூட்டாளி!..

தொடர்புடைய இணைப்புகள்

12 yrs old director Ashiq Jinu wants to direct Thala Ajith

People looking for online information on Ajith Kumar, Ashiq Jinu, EVA, Master Ashiq Jinu, Pitika, ThalaAjith, The Columbian Academy, Valimai will find this news story useful.