தயவு செஞ்சு இத மட்டும் பண்ணாதீங்க - ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த விஜய்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'சர்கார்' படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் தற்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, மற்றுமொரு முக்கியமான வேடத்தில் கதிர் நடிக்கிறார்.

Viral video of Thalapathy Vijay request to his fans

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. படப்பிடிப்பு முடிந்து விஜய் திரும்பும் போது சில ரசிகர்கள் அவரது காரை வேகமாக பின் தொடர முயன்றனர்.

அதனைத் தொடர்ந்து நிலைமையை புரிந்து கொண்ட விஜய், தனது காரின் கதவுகளில் இருக்கும் கண்ணாடியை இறக்கி, தனது காரை முந்த முயற்சிக்காதீர்கள் எனவும் காரை பின் தொடர்ந்து வர வேண்டாம் எனவும் மிகவும் பணிவாக கேட்டுக் கொண்டார்.

விஜய்யின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.