நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியலில் கூட்டணி குறித்து பேச்சுக்கள் பரபரப்பை கூட்டி வருகின்றன. மற்றொரு புறம் இந்த தேர்தலில் மக்களை ஈர்ப்பதற்கான வியூகங்களில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுவருகின்றன.

அதன் ஒரு பகுதியாக பிரபல இயக்குநரும் நடிகருமான ரவி மரியா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் அஇஅதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.
இவர் ஆசை ஆசையாய் , மிளகாய் உள்ளிட்ட படங்களில் இயக்கியுள்ளார். மேலும், தேசிங்கு ராஜா, ஜில்லா உள்ளிட்ட படங்களில் காமெடி கலந்த வில்லன் வேடத்தில் நடித்து அசத்தினார்.
சமீபத்தில் பாமக - அதிமுக கூட்டணியின் காரணமாக மனக்கசப்பு ஏற்பட்டு நடிகர் ரஞ்சித் பாமகவில் இருந்து விலகி டிடிவி தினகரனின் அமமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.