பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு காலமானார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பழம் பெரும் நடிகர்களில் ஒருவர் டைப்பிஸ்ட் கோபு. இவர் நாடகங்களில் நடிக்கும் போது டைப்பிஸ்ட் வேடத்தில் நடித்ததால் டைப்பிஸ்ட் கோபு என்று அழைக்கப்பட்டார்.

Veteran Actor Typist Gopu is no more now

இவர் ஏராளமான காமெடி மற்றும் குணச்சத்திர வேடங்களில் நடித்துள்ளார். மேலும் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என தமிழின் முன்னணி ஹீரோக்கள் படங்கள் உட்பட 400க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.

இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளார். இவர் உடல் நலக்குறைவின் காராணமாக காலமானார். இவரது இறுதிச்சடங்குகள் இன்று(மார்ச் 7) காலை 11.30 மணிக்கு அவரது இல்லமான நம்பர் 3138,  6 வது மெயின் ரோடு, அரசு உயர்நிலைப்பள்ளி, ஐயப்பாக்கம், சென்னை -77. என்ற முகவரியில் நடைபெறவிருக்கிறது.