விஜயகுமார் இயக்கி, நடித்த ‘உறியடி’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக பலரது பாராட்டுக்களை பெற்ற இப்படத்தின் 2ம் பாகத்தை நடிகர் சூர்யாவின் 2டி எண்ட்ர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தையும் விஜயகுமாரே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் விஸ்மயா, ஷங்கர் தாஸ், அப்பாஸ், ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ சுதாகர் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாதி அரசியல் குறித்து பேசும் இப்படத்தின் ஷூட்டிங் 36 நாட்களில் நிறைவடைந்ததையடுத்து, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது.
‘96’ திரைப்படத்திற்கு இசையமைத்த கோபி வசந்தா இசையமைக்கும் இப்படத்திற்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் கோடை விடுமுறையையொட்டி வரும் மே.17ம் தேதி ரிலீசாகவுள்ளது.