தளபதி 63 ஷூட்டிங்: பிரபல கல்லூரியில் விஜய்யை கண்ட ரசிகர்கள் உற்சாகம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிரபல தனியார் கல்லூரிக்கு நடிகர் விஜய் சென்றுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Thalapathy Vijay shoots for Thalapathy 63 in a Popular College excites fans, video goes viral

‘தெறி’, ‘மெர்சல்’ திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும், கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி, விவேக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரபல கல்லூரி ஒன்றுக்கு சென்ற நடிகர் விஜய்யை அங்குள்ள ரசிகர்கள் ஆராவாரத்துடன் வரவேற்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த கல்லூரியில் ‘தளபதி 63’ திரைப்படத்தில் இடம்பெறும் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ‘தளபதி 63’ திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.