பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடத்தில் பிரபலமான நடிகர் தாடி பாலாஜி, சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தனது தனது மனைவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா, எஸ்.ஐ மனோஜ் குமார் என்பவருடன் சேர்ந்துக் கொண்டு தனது மகளில் எதிர்காலத்தை சீரழிப்பதாக குற்றம்சாட்டினார். மகள் போஷிகாவை காரணம் காட்டி பணத்திற்காக தன்னை நித்யா பயன்படுத்திக் கொள்வதாக கூறிய பாலாஜி, அது தொடர்பான சில ஆவணங்களையும் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் சமர்ப்பித்தார்.
இந்நிலையில், சென்னை கமிஷ்னர் அலுவலகத்திற்கு வந்த நடிகர் பாலாஜி, எஸ்.ஐ மனோஜ்குமார் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையரை சந்தித்தார். அதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பாலாஜி, உன்னதமான காவல்துறை பணியில் இருந்துக் கொண்டு எஸ்.ஐ மனோஜ்குமார் தனது குடும்பத்தை நாசமாக்குவதாக குற்றம்சாட்டினார்.
தற்போது மனோஜ்குமார் திருச்சிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தண்டனை பெற்றுத் தரும் வரையில் ஓய மாட்டேன் என்றும் பாலாஜி தெரிவித்துள்ளார். நித்யாவும், எஸ்.ஐ மனோஜ்குமாரும் தாங்கள் செய்யும் தவறுகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால் போராட்டம் நடத்துவேன் என பாலாஜி கூறியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும், விஜய் டிவி பற்றியும் தவறாக பேசினால் நித்யாவிற்கு வாய் அழுகிபோய்விடும் என பாலாஜி கூறினார்.
கல்லூரி பெண்கள், வீட்டில் இருக்கும் பெண்களின் வாழ்க்கை சீரழிவதற்கு முக்கிய காரணம் ஃபேஸ்புக், டிக் டாக், வாட்ஸ் அப் போன்றவை தான். எதையும் அளவோடு செய்தால் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. எஸ்.ஐ மோஜ்குமார் போன்ர ஒருசிலரால் தான் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு பிரச்னைகளை வெடிக்கின்றன. எனது மகள் போஷிகாவை ஒரு நல்ல போர்டிங் ஸ்கூலில் சேர்க்க வேண்டும். அவளது எதிர்காலத்திற்கு அப்பாவாக நான் இருக்கிறேன் என்று பாலாஜி தெரிவித்துள்ளார்.
நித்யா வாய் அழுகிப்போயிடும்- தாடி பாலாஜி ஆவேசம் வீடியோ