தலை கீழாகத்தான் குதிக்கப்போகிறேன் - வசுந்தராவின் டெரர் டாஸ்கில் சிக்கிய விஜே நிக்கி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை வசுந்தரா, விஜே நிக்கிக்கு வித்தியாசமான டாஸ்குகளை கொடுத்துள்ளார்.

First Ever hanging interview-Actress Vasundhara plays Kiss Me Hug Me Slap Me

‘தென்மேர்கு பருவக்காற்று’, ‘ஜெயம் கொண்டான்’, ‘பேராண்மை’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். சமீபத்தில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படத்தில் இவரது நடிப்பு பாராடுக்களை பெற்றது.

தற்போது விக்ராந்த் நடிப்பில் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒட்டகத்தை வைத்து உருவாகும் ‘பக்ரீத்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை வசுந்தரா நடித்துள்ளார். இந்நிலையில், Behindwoods2-ன்  Kiss Me Hug Me Slap Me செக்மெண்ட்டில் விளையாடிய நடிகை வசுந்தரா, விஜே நிக்கிக்கு வித்தியாசனமான டாஸ்க்குகளை கொடுத்துள்ளார்.

விஜே கேட்ட கேள்விகளுக்கு சரியாகவும், சில கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்றும் வசுந்தரா கூறினார். மேலும்‘Kiss Me Hug Me Slap Me’-க்கு பதிலாக தலையில் வெயிட்டான புத்தகங்களை அடுக்குவது, தலை கீழாக அமர்ந்துக் கொண்டு கேள்வி கேட்பது, நகத்தில் மஞ்சள் நெயில் பாலிஷ் போடுவது, நாக்கை நீட்டிக் கொண்டே பாடுவது, பத்மாசனம் செய்வது என வித்தியாசமான டாஸ்க்குகளை கொடுத்துள்ளார்.

தலை கீழாகத்தான் குதிக்கப்போகிறேன் - வசுந்தராவின் டெரர் டாஸ்கில் சிக்கிய விஜே நிக்கி வீடியோ