சர்வதேச மகளிர் தினம் இன்று(மார்ச்.8) கொண்டாடப்படும் நிலையில், நடிகை கவுதமி கிராம புற பெண்களுடன் இணைந்து மகளிர் தினத்தை கொண்டாடியுள்ளார்.

இது தொடர்பாக நடிகை கவுதமி தனது ட்விட்டர் பக்கத்தில், தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும், ஒரு தாயாகவோ, மனைவியாகவோ, மகளாகவோ, சகோதரியாகவோ, தோழியாகவோ, தன்னை சுற்றியிருப்பவர்களின் நலனுக்காக தன்னால் முடிந்த எல்லாவற்றையும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்பவள் தான் பெண்.
எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும், எவ்வளவு பெரிய போர்க்களமானாலும் தன்னால் அன்பு பாராட்டப்படுபவர்களுக்காக எந்த ஒரு தியாகத்தையும், எந்த ஒரு முகச்சுளிப்புமின்றி செய்பவள் தான் பெண் எனும் அந்த உண்மையான ஹீரோ.
இந்த சர்வதேச மகளிர் தினத்தை முள்ளி, வளர்பிறை, முன்னுதிகுப்பம், கத்ரிச்சேரி, உளுத்தமங்கலம் போன்ற பகுதிகளில் இருக்கும் அழகான ஹீரோக்களுடன் கொண்டாடுவது எனக்கு பெருமையளிக்கிறது. தங்களின் ஆற்றலையும் மகிழ்ச்சியையும் என்னுடன் பகிர்ந்து கொண்டு ஒவ்வொரு நாளும் எனக்கு உத்வேகம் அளித்ததற்கு நன்றி.’ என கவுதமி பதிவிட்டுள்ளார்.
உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 💐💐💐
— Gautami (@gautamitads) March 8, 2019
இந்த உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் ஹீரோ தான்!!🌹
தன் மனவலிமை, மகிழ்ச்சி ஆகியவற்றை என்னுடன் பகிர்ந்து என்னை ஒவ்வொரு நாளும் ஈர்க்கும் அனைத்து பெண்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்🌹
அன்புடன் கௌதமி 🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/xnp24ftXRf