தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராமாபுரத்தில் உள்ள ஜீவன் ஜோதி மஹாலில் வரும் மார்ச்.3ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறவிருந்த ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் கே.என்.பாஷாவின் ஆலோசனைப்படி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதை உறுப்பினர்களுக்கு தெரிவித்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.