ரசிகர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த திரையரங்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் - சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த படம் 'விஸ்வாசம்'. இந்த படத்தில் அஜித்துடன் நயன்தாரா, விவேக், யோகிபாபு, கோவை சரளா உட்பட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.  இந்த படம் கடந்தமாதம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி வரவேற்பை பெற்றது.

Rohini theatre Condemned fans damage theatre property during Ajith's Viswasam 50th day special screening

நேற்றுடன் இந்த படம் வெளியாக 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை முன்னிட்டு சில திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டது.

இந்நிலையில் ரோகினி திரையரங்கத்தின் நிர்வாக இயக்குநர்  ரேவந்த் சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். கிழிந்த திரையின்  புகைப்படம் பகிர்ந்த அவர், முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டிருந்தும் அது தவறாக கையாளப்பட்டிருக்கிறது. 

சிலரின் கேவலமான நடவடிக்கையினால் ஒட்டுமொத்த ரசிகர்ளுக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்துவதாக அமைந்து விடும். இதற்கு நிரந்தர தீர்வு காணும் வரை இனி சிறப்புக்காட்சிகள் திரையிடப்படாது. என்றார்.