‘தலைவர் 166’-சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் ஸ்டார் ஹீரோயின்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘பேட்ட’ திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 166’ திரைப்படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Lady Superstar Nayanthara heroine for Rajinikanth-AR Murugadoss film

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் திரைப்படம் விரைவில் தொடங்கவுள்ளது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் நடிக்கவில்லை என நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் நமக்கு கிடைத்தது. எனினும், இது குறித்து ரஜினியின் பி.ஆர்.ஓ-விடம் தொடர்புக் கொண்டபோது படக்குழு ஹீரோயின் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில், நமக்கு கிடைத்த தகவலின்படி, இப்படத்தின் ஹீரோயினாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கவிருப்பதாக தெரிகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

‘சந்திரமுகி’, ‘குசேலன்’, ‘சிவாஜி’ (ஒரு பாடலுக்கு நடனமாடினார்) ஆகிய படங்களை தொடர்ந்து 4வது முறையாக ‘தலைவர் 166’ திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறார்.