'பாகுபலி'க்கு பிறகு பிரம்மாண்டமாக உருவாகும் ராஜமௌலி படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மஹதீரா', 'நான் ஈ', 'பாகுபலி 1', 'பாகுபலி 2' என பிரம்மாண்ட படங்களை இயக்குவதில் வல்லவர் ராஜமௌலி. இவரது படங்கள் தெலுங்கில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது.

Rajamouli's next film RRR film will release in July 2020

இதனைத் தொடர்ந்து அவர் தற்போது RRR என்ற படத்தை இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. மேலும் இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் இணைந்து நடிப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

மேலும் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட், ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஹாலிவுட் நடிகை டெய்சி எட்கர் ஜோன்ஸ் இந்த படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

அதனைத் தொடர்ந்து பிரபல நடிகர் சமுத்திரக்கனி இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். மேலும் இந்திய சுதந்திர போராட்ட காலகட்டமான 1920 களில் நடப்பது போன்று இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படம் இந்தியா முழுவதும் 10 மொழிகளில் அடுத்த வருடம் 2020 ஜூலை 30ல் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.