தளபதி விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படமான ‘தளபதி 64’ திரைப்படத்தின் இயக்குநர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘தெறி’, ‘மெர்சல்’ திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும், கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி, விவேக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.
சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய் நடிக்கவிருக்கும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் இயக்குநர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடித்த ‘வேலாயுதம்’ திரைப்படத்தை இயக்கிய மோகன்ராஜா, மீண்டும் விஜய்யை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நியூ காலேஜ் ஒன்றில் நடைபெற்ற விழாவில் கலந்துக் கொண்டு பேசிய இயக்குநர் மோகன்ராஜா, ‘விஜய் சாருடன் வேலாயுதம் படம் பண்ணினேன். திரும்பவும் படம் பண்ணுவேன்’ என தெரிவித்தார். இயக்குநர் மோகன்ராஜா பேசிய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனால் தளபதி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Director #MohanRaja opens about his next with #ThalapathyVijay in an event recently! pic.twitter.com/I48sX2Ng8i
— Actor Vijay (@ActorVijayFC) March 8, 2019