தளபதி அயர்ன் மேன்.. அப்போ தல?-கோலிவுட் ஹீரோயின்களின் கற்பனை சூப்பர் ஹீரோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் கேப்டன் மார்வல் திரைப்படம் மகளிர் தினத்தையொட்டி வரும் மார்ச்.8ம் தேதி ரிலீசாகவுள்ளது.

Captain Marvel- Thalapathy as Iron Man, Thala Ajith as Tor, heroines shares their favorite super hero

சென்னை சத்யம் திரையரங்கில் ‘கேப்டன் மார்வல்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களான  தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா, ரகுல் ப்ரீத் ஆகியோர் பங்கேற்றனர்.

மார்வல் ஸ்டுடியோஸின் முதல் பெண் சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கும் முதல் திரைப்படம் ‘கேப்டன் மார்வல்’ என்பதால் நடிகைகள் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, மார்வல் ஹீரோக்களின் கேரட்கர்களில் தமிழ் ஹீரோக்கள் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தமிழ் ஹீரோயின்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

‘அவெஞ்சர்ஸ்’ திரைப்படத்தை தமிழில் எடுக்க முடிவு செய்தால், எந்தெந்த கேரக்டர்களில் தமிழ் ஹீரோக்கள் நடித்தால் எப்படி இருக்கும் என கதாநாயகிகளிடம்  கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஹீரோயின்களில் காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் அயர்ன் மேன் கேரக்டருக்கு தளபதி விஜய் பொருத்தமாக இருப்பார். அவரது ஸ்டைல், காமெடி, தோரணை என அனைத்தும் அயர்ன் மேன் கேரக்டருக்கு பொருந்தும் என கூறியுள்ளனர்.

ஹல்க் கேரக்டரில் நடிகர்கள் ஆர்யா, விஷால் இருக்கலாம் என்றும், தோர் கேரக்டரில் சூர்யா நடிக்கலாம் என்றனர். காஜல் அகர்வால் தோர் கேரக்டருக்கு தல அஜித்தும், கேப்டன் அமெரிக்காவிற்கு சூர்யாவும் நடிக்கலாம் என்றார்.

தளபதி அயர்ன் மேன்.. அப்போ தல?-கோலிவுட் ஹீரோயின்களின் கற்பனை சூப்பர் ஹீரோஸ் வீடியோ