மரண மாஸ் வெற்றி- சூப்பர் ஸ்டாருடன் கேக் வெட்டிக் கொண்டாடிய பேட்ட டீம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தின் 50வது நாள் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது.

Petta 50 Days Celebration: Rajinikanth celebrates with Petta team and his family

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பேட்ட’ திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா நடித்திருந்தனர், மேலும், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட ஏரளாமனோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் 50வது நாள் வெற்றிக் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் படக்குழுவினருடன் இணைந்து சாக்லெட் கேக் வெட்டி பேட்ட படத்தின் 50வது நாள் வெற்றியைக் கொண்டாடினர்.

இந்த கொண்டாட்ட புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்தின் மனைவி, அவரது இரண்டு மருமகன்களும் பங்கேற்றனர். ரஜினிகாந்த் மருமகன் தனுஷ் மற்றும் விசாகனுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.