கடந்த 1979-ல் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீப்ரியா இணைந்து நடித்த ‘நீயா’ திரைப்படத்தின்
ஜம்போ சினிமாஸ் தயாரிப்பில் எல்.சுரேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நீயா 2’ திரைப்படத்தில் நடிகர் ஜெய், நடிகைகள் ராய் லக்ஷ்மி, வரலக்ஷ்மி சரத்குமார், கேத்ரின் தெரசா உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் ஏற்கனவே ரிலீசான நிலையில், தற்போது இப்படத்தில் இருந்து பாம்பு பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. ‘நீயா’ படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடலான ‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்’ பாடல் ‘நீயா 2’ திரைப்படத்திலும் இடம்பெற்றுள்ளது.
இப்பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சபீர் இசையமைத்துள்ள இந்த படத்தில் வரும் ‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்’ பாடலை நரேஷ் ஐயர், ரீட்டா தியாகராஜன் இணைந்து பாடியுள்ளனர். பாம்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் மீது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சூப்பர்ஹிட் பாம்பு பாடலில் வரலக்ஷ்மி- ‘நீயா 2’ லிரிக் வீடியோ இதோ..! வீடியோ