பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர்களில் ஒருவர். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார். இதன் மூலம் தமிழிலும் பரவலாக அறியப்படுகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் உடல் நெருப்பு எரிய நடந்து வரும் காட்சிகள் காண்போரை பதட்டமடையச் செய்தது. ஆனால் அவர் மிகவும் கூலாக நடந்துவந்தார்.
அக்ஷய் குமார் தற்போது தி எண்ட் என்ற பெயரில் அமேசான் தளத்தில் தொடர் ஒன்றில் பங்கேற்கவிருக்கிறார். இதன் அறிமுக விழாவில் தான் அவர் உடல் முழுவதும் நெருப்பு எரிய நடந்து வந்தார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கும் போது ஆக்சன் எனக்குள்ளேயே இருக்கிறது. முதலில் நான் ஒரு ஸ்டண்ட் மேன் பின்னர் தான் நடிகர் எனறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த அவரது மனைவி, இதன் பிறகு நீங்கள் உயிரோடிருந்தால் வீட்டிற்கு வாருங்கள், நான் உங்களை கொல்ல போகிறேன் என்று ட்வீட் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த அக்ஷய் இதற்குதான் நான் உண்மையில் பயம் கொள்கிறேன். என்று நக்கலாக பதிலளித்தார்.
நெருப்பில் எரியும் 2.0 நடிகர் - பதற வைக்கும் சாகசம் வீடியோ