சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்? உண்மை விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘பேட்ட’ திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்தப்படத்தின் ஹீரோயின்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Nayanthara and Keerthy Suresh a part of Super Star Rajinikanth? Official statement on Thalaivar 166 heroine

‘சர்கார்’ படத்தின் வெற்றிக்கு பின் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 166’ திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.

இப்படத்தின் இதர கதாபாத்திரங்களுக்கான தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரஜினிக்கு ஜோடியாக நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், நமக்கு கிடைத்த தகவலின்படி, கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நடிக்கவில்லை என தெரிகிறது. எனினும், இது குறித்து ரஜினியின் பிஆர்ஓ-விடம் கேட்டபோது, நயன்தாரா, கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்கலாமா என இயக்குநர் ஆலோசித்து வருவதாகவும், எதுவும் இன்னும் முடிவாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மார்ச் மாதம் இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.