கதிர் நடித்த 'கிருமி' என்ற படத்தை இயக்கியவர் அணுசரன் முருகையா. நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் இயக்கும் படம் 'பன்னி குட்டி'. இந்த படத்தில் கருணாகரன், யோகிபாபு ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். இந்த படத்துக்கு 'முகமூடி', 'கிருமி', 'யுத்தம் செய்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த கே இசையமைக்கிறார். இந்த படத்தில் சிங்கம் புலி, திண்டுக்கல் லியோனி, டி.பி.கஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
மேலும் இந்த படத்துக்கு காக்க முட்டை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கிய மணிகண்டன் கதை எழுதியுள்ளார். சக்தி முருகன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.