பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள 90 ML திரைப்படத்தின் 3வது ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

பெண் இயக்குநர் அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள 90ML திரைப்படம் அடல்ட் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. நடிகர் சிம்பு இசையமைத்து, கெஸ்ட் ரோலில் நடித்துள்ள இப்படத்தில் பொம்மு லக்ஷ்மி, ஸ்ரீ கோபிகா, மோனிஷா ஆகியோர் ஓவியாவின் தோழிகளாக நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், ‘பழம்’, ‘பால்’ என வித்யாசமான கேப்ஷன்களுடன் ஸ்னீக் பீக் வீடியோக்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து ‘தேன்’ என்ற 3வது ஸ்னீக் பீக் வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. இதில், காருக்குள் இருவர் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சி இடம்பெற்றுள்ளது.
அடல்ட் காமெடி திரைப்படம் என்பதால், இந்த படத்திற்கு 18+ ஆடியன்ஸ் மட்டும் செல்லலாம் என நடிகை ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு ஓவியா நடிப்பில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் மீது கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
பழம் நழுவி பாலில் விழுந்தால் அடுத்து தேன் தான் - ஓவியாவின் 90ML ஸ்னீக் பீக் வீடியோ வீடியோ