பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, அது குறித்து வீடியோ வெளியிட்டு வந்த கும்பல் குறித்தான சம்பவம் தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு தரப்பில் இருந்தும் இவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கக் கோரி அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தலைமறைவாகியிருந்த முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பசிய அவர், , ‘பொள்ளாச்சி பாலியல் கொடூரம் சம்பந்தமான விவகாரத்தில் முறையான உடனடியான நடவடிக்கை தேவை என்பதை அவரிடம் எடுத்துக் கூறியுள்ளோம். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக சொல்லி இருக்கிறார். சட்டம் தன் கடமையைச் செய்யும் என நம்புவோம்.
இந்த நேரத்தில் ஊடகங்களான உங்களுக்கு ஒரு கோரிக்கை. எந்த காரணத்தைக் கொண்டு பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களையோ, படங்களையோ எதிலும் பகிர்ந்துவிட வேண்டாம். எங்கும் சொல்லி விட வேண்டாம்' என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.