அடுத்த அடல்ட் படத்துக்கு தேதி குறித்த ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கவுதம் கார்த்திக் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் தெலுங்கு ரீமேக்கனா ‘சீகடி கடிலோ சித்தா கொட்டடு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Iruttu Araiyil Murattu Kuththu Telugu Remake will be releasing on March.21

தமிழில் ‘ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’ திரைப்படங்களை இயக்கிய பி.சந்தோஷ், ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான  ‘சீகடி கடிலோ சித்தா கொட்டடு’ படத்தை இயக்கியுள்ளார்.

ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடல்ட் ஹாரர் காமெடி ஜானரில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் கவுதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, ஷாரா, கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், மதுமிதா ஆகியோர் நடித்திருந்தனர்.

தமிழில் இப்படம் கடுமையான விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்தபோதிலும் வசூல் ரீதியாக நல்ல வசூலை பெற்றது. இந்நிலையில், தெலுங்கில் ரீமேக் ஆகியுள்ள இப்படத்தின் நாயகனாக ஆதித் அருண் நடித்துள்ளார். இவருடன் நிக்கி தம்போலி, பொசானி முரளி கிருஷ்ணா, ரகுபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  தமிழை விட தெலுங்கில் படு கவர்ச்சியாகவும் இரட்டை அர்த்தங்கள் வசனங்கள் மிகுந்ததாகவும் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழை விட தெலுங்கில் அதிக கவர்ச்சியும், இரட்டை அர்த்த வசனங்களும் இப்படத்தின் டிரைலரில் இட்மபெற்றதாக விமர்சனங்கள் எழுந்தன. தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘பாக்கி செட்டி பாப்பயம்மா’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இப்படம் வரும் மார்ச்.21ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அடுத்த அடல்ட் படத்துக்கு தேதி குறித்த ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ இயக்குநர் வீடியோ