'மீசைய முறுக்கு' படத்துக்கு பிறகு ஹிப்ஹாப் தமிழா நடித்து வரும் படம் 'நட்பே துணை'. இந்த படத்தை அவ்னி சினிமாக்ஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரிக்க புதுமுக இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு இயக்கி வருகிறார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த படத்தில் பாண்டியாராஜன், கௌசல்யா, கரு.பழனியப்பன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் யூடியூப் பிரபலங்களான ஷா ரா, ஆர்.ஜே.விக்னேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் நட்பே துணை படத்தை குறிப்பிட்டு, சும்மா எப்போ பார்த்தாலும், நட்பு, காதல், பாரதியார், தமிழ் னு.... இம்சைங்க... என்று விமர்சித்துள்ளார்.
அதற்கு பதிலளித்த ஹிப்ஹாப் ஆதி, தண்ணி, தம்மு, இரட்டை அர்த்த வசனங்கள்னு எடுத்து அதுக்கு திட்டுனா பரவால நண்பா.... நட்பு, காதல், பாரதியார், தமிழ் எல்லா விஷயம் தானே என்று பதிலளித்துள்ளார்.
Thanni, dhammu, double meaning joke nu eduthu athuku thittuna paravala nanba.
— Hiphop Tamizha (@hiphoptamizha) March 3, 2019
Natpu, kadhal, bharathiyar, tamil ellamey nalla vishayam thaney 🤔 #stophate #spreadlove 🙏🏻