தளபதி 63-ல் இணைந்த பிரபல வில்லன் நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல வில்லன் நடிகர் ஒப்பந்தமாகியுள்ளார்.

Actor Soundararaja to play a meaningful role in Vijay-Atlee's Thalapathy 63

‘தெறி’, ‘மெர்சல்’ திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும், கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி, விவேக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் சவுந்தர்ராஜா இப்படத்தில் புதிதாக இணைந்துள்ளார். விஜய் சேதுபதி நடித்த ‘தர்மதுரை’, ‘கடைக்குட்டி சிங்கம்’, விஜய்யின் ‘தெறி’ உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ள சவுந்தர்ராஜா ‘தளபதி 63’ திரைப்படத்தில் தான் நடிக்கவிருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவரது ட்வீட்டில், ‘தெறி திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ படத்தில் இணைவதில் மகிழ்ச்சி. சிறியதாக இருந்தாலும், அர்த்த்முள்ள கதாபாத்திரம். நன்றி அட்லி. விஜய் அண்ணாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் மிக்க மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.