நானும் சிம்புவும் இணைகிறோம்: ‘மஹா’ நியூஸ் லீக்கானதால் ஹன்சிகா ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘மஹா’ திரைப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதை நடிகை ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

Hansika and STR are back in Maha-Haniska's official statement is here

ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்து வரும் ‘மஹா’ திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின. ‘மஹா’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடனமாடவிருப்பதாகவும், அதற்காக 7 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், நடிகை ஹன்சிகா இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது ட்வீட்டில், ’முன்கூட்டியே தகவல் கசிந்ததால்.. நானும் சிம்புவும் மஹா படத்தில் இணைகிறோம்’ என்பதை தெரிவித்துள்ளார்.

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தை தொடர்ந்து சிம்பு, இயக்குநர் வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். சமீபத்தில் ஓவியா நடித்த ‘90ML’ திரைப்படத்திலும் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.