'என்ஜிகே' படத்துக்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ஆர்யா, மோகன்லால் , சாயீஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்ததாக கே.வி.ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அதற்கு பதில் ட்விட் செய்த ஆர்யா, கே.வி.ஆனந்த் மற்றும் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த சூர்யா இந்த மனிதர் வெறுப்பு மற்றும் கெட்ட எண்ணங்கள் அற்றவர். அவருக்கு நன்றி மட்டும் தெரிவிக்க முடியாது. அவருக்கு நடைபெறவிருக்கும் திருமணத்துக்கு வாழ்த்துகள் என்றார்.