முத்தத்துக்கு நோ சொல்லும் ரைசாவின் செல்லாக்குட்டி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா தனது நாய்க்குட்டியை கொஞ்சி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Bigg Boss fame Raiza shares her video of kissing dog goes viral

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை ரைசா வில்சன், தனுஷ் நடிப்பில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி 2’ திரைப்படத்தில் நடிகை கஜோலுக்கு உதவியாளராக நடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து பிக் பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ஹீரோயினாக ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தில் நடித்தார். யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் வெளியான இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது மணி சந்துரு இயக்கத்தில் ‘ஆலிஸ்’ என்ற படத்தில் ரைசா நடித்து வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியதுவம் வாய்ந்த படமான இப்படத்தில் ரைசா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், தனது நாய்க்குட்டியை கொஞ்சிக் கொண்டு அதற்கு முத்தம் கொடுக்க முயலும் வீடியோ ஒன்றை நடிகை ரைசா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : Raiza, Alice