நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், சர்கார் படத்தில் விஜய் கூறப்பட்ட கள்ள ஓட்டு தடுப்புச் சட்டப்பிரிவு 49P குறித்து தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்துள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படத்தில் வெளிநாட்டிலிருந்து தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக இந்தியா வரும் விஜய்யின் ஓட்டுக்கு பதில் கள்ள ஓட்டு போடப்பட்டிருக்கும். அதையடுத்து, கள்ள ஓட்டை தடுக்கும் சட்டப்பிரிவான 49P கீழ் வழக்கு தொடர்வார்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் 49P என்ற சட்டப்பிரிவு இருப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் விதமாக விஜய் நடித்த சர்கார் படம் அமைந்திருந்தது. ஒரு நபரின் ஓட்டு கள்ள ஓட்டாக பதிவானால், ஓட்டுக்கு உரிய நபர் மீண்டும் வாக்களிக்க முடியும் என்பதே இந்த 49P பிரிவு ஆகும்.
இந்நிலையில், விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கள்ள ஓட்டுக்களை தடுக்கும் சட்டப்பிரிவு 49P குறித்து தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்து வருகிறது. இது தொடர்பான போஸ்டர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இதனை இயக்குநர் முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Glad, election commission is bringing awareness on #49p #Sarkar pic.twitter.com/SPnk71M7RR
— A.R.Murugadoss (@ARMurugadoss) March 7, 2019