அரசியலுக்கு வருவது குறித்து அறிவித்த வரலக்ஷ்மி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'போடா போடி' படத்தின் மூலம் தமிழ்திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் வரலக்ஷ்மி சரத்குமார். பின்னர், 'தாரைதப்பட்டை', 'சண்டக்கோழி 2', 'சர்கார்' என தொடர்ந்து மிரட்டலான வேடங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறார். 

Actress Varalashmi sarathkumar opens up her political entry

சமீபத்தில் தனியார் கல்லூரி விழாவில் தனது பிறந்தநாளை கொண்டாடிய வரலக்ஷ்மி, சானிட்டரி பேட் இயந்திரத்தை 35 பள்ளிகள் மற்றும் 12 கல்லூரிகளில் நிறுவும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர், பேசிய வரலக்ஷ்மி, அரசியலை நன்கு கற்றுக் கொண்டிருக்கிறேன். கற்று கொண்ட பிறகு சரியான நேரத்தில் அரசியலுக்கு வருவேன். நமக்கு நாமே என பெண்கள் பாதுகாப்பும், தற்காப்பும் கற்றுக் கொள்ள வேண்டும். சமூகவலைதளங்களை சரியாக பயன்படுத்த வேண்டும்.

அரசியல் என்பது கெட்ட வார்த்தை இல்லை. தற்போது உள்ள சூழலில் ஒரு விரல் புரட்சி தேவை. எனது அப்பா சரத்குமாரின் அரசியலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்று கூறியுள்ளார்.  தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அரசியல் வருகை குறித்து வரலக்ஷ்மியின் பேச்சு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.