யூடிபில் சாதனை படைத்த ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘கனா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல் யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது.

Vaayadi Petha Pulla from Kanaa crosses 100 Million views

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘கனா’ திரைப்படம் மகளிர் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகி பெரும் வரவேற்பை பெற்றது.

திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன், அவரது மகள் ஆராதனா, பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி இணைந்து பாடிய ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

தந்தை-மகள் உறவை சொல்லும் இந்த பாடலின் துள்ளலான இசையும், சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா கொடுத்த அழகான ரியாக்க்ஷன்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது இந்த பாடல் 10 கோடி பார்வையாளர்களை கடந்துள்ள சாதனையை படக்குழுவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

யூடிபில் சாதனை படைத்த ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல் வீடியோ