சென்னைக்கு வரும் ஏலியன்: எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் டீசர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேப்டன் விஜயகாந்தின் நண்பரான இப்ராஹிம் ராவுத்தரின் ராவுத்தர் மூவிஸ் தயாரிப்பில் ஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Actor Aari's Ellam Mela Irukkuravan Paathuppaan Teaser is out now

நீண்ட இடைவெளிக்குப் பின் ராவுத்தர் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் ஆரிக்கு ஜோடியாக சாஷ்வி பாலா நடிக்கிறார். இப்படத்தை கவிராஜ் இயக்கும் இப்படத்தை மறைந்த தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தரின் மகன் முகமது அபுபக்கர் தயாரிக்கிறார்.

மேலும், மொட்டை ராஜேந்திரன், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் ஆச்சார்யா இசையமைக்கும் இப்படத்திற்கு லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

தற்போது இப்படத்தின் டீசரை நடிகரும், புதுமாப்பிள்ளையுமான ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நியு ஏஜ் ஏலியன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசரில் ஏலியன்கள் தொழில்நுட்பத்தை இயக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

சென்னைக்கு வரும் ஏலியன்: எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் டீசர் இதோ வீடியோ