www.garudabazaar.com

#4YearsOfVIVEGAM: விவேகம் படத்தின் ஒளிப்பதிவில் இவ்வளவு இருக்கா? Colours Of VIVEGAM!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில், வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில், சத்ய ஜோதி நிறுவனம் தயாரிப்பில் கடந்த 2017 ஆம் வருடம் ஆகஸ்ட் 24 ஆம் தேதி ரிலீசான  விவேகம் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 3200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. மேலும் தமிழகத்தில் 800 திரையரங்குகளில் வெளியானது.

4 years of vivegam color palates cinematography

இந்த படத்தின் ஒளிப்பதிவு குறிப்பாக இந்த படத்தில் பயன்படுத்திய வண்ணங்கள் (Colour Palates) உலகத்தரமான நிலையில் உள்ளவை. படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் பிரத்யேகமான வண்ணக்கலவைகள் பயன்படுத்தப்பட்டு இருக்கும். மேலும் விவேகம் படத்தின் சண்டைக்காட்சிகள் உலகதரத்தில் வடிவமைக்கப்பட்டு, ஒளிப்பதிவு செய்து எடிட் செய்யப்பட்டு இருக்கும்.  விவேகம் படத்தில் பல இடங்களில் பச்சை வண்ணம் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

4 years of vivegam color palates cinematography

வண்ண உளவியல் (Color Psychology) அடிப்படையில் விவேகம் படத்தில் தல அஜித்தின் கதாபாத்திரம் சந்திக்கும் போராட்டங்களை, படம் பார்க்கும் ரசிகர்கள் அவர்களை அறியாமலேயே அவர்களுக்குள் இயக்குனர் விரும்பிய உணர்வை கடத்த வைப்பதற்காக, இந்த கலர் சைக்காலஜி அடிப்படையில் தல அஜித் தோன்றும் காட்சிகளில் பச்சை வண்ணம் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

4 years of vivegam color palates cinematography

ஏற்கனவே அஜித் விஷ்ணுவர்தன் கூட்டணியில் வெளியான ஆரம்பம் படத்திலும் பச்சை சார்ந்த நிறங்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டதும் கலர் சைக்காலஜியை அடிப்படையில்தான்.

4 years of vivegam color palates cinematography

விவேகம் படத்தின் இந்த காட்சியை எடுத்துக்கொண்டால் அஜித்தின் கதாபாத்திர போராட்டத்தை குறிக்க பச்சையும், 

4 years of vivegam color palates cinematography

போராட்டத்தின் கோபநிலைக்கு சிவப்பு நிறமும் கையாளப்பட்டு இருக்கும்.

4 years of vivegam color palates cinematography

மேலும் நவீன சினிமாக்களில் ஒரே காட்சியில் அடுத்தடுத்த ஷாட்களில் வண்ணங்களை மாற்றும் உத்தியை காட்சிகளின் தேவைக்கேற்ப உலகின் தலைச்சிறந்த ஒளிப்பதிவாளர்கள் பயன்படுத்துவர். 

4 years of vivegam color palates cinematography

விவேகம் படத்தின் மிகச்சிறந்த வேலைப்பாடுடைய சண்டைக்காட்சியான இதில் அடுத்தடுத்த ஷாட்களில் படத்தின் வண்ணம் சிவப்பிலிருந்து பச்சைக்கு மாற்றப்பட்டு இருக்கும்.

4 years of vivegam color palates cinematography

இந்த படம் தமிழில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கன்னடம் மற்றும் இந்தியில் இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இரண்டு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு திரையரங்கிலும், தொலைகாட்சியிலும் ஹிட்டானது. 

4 years of vivegam color palates cinematography

கன்னடத்தில் ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களை தொடர்ந்து ஹாட்ரிக்காக விவேகம் (கமாண்டோ) படமும் சூப்பர் ஹிட் ஆனது.

தொடர்புடைய இணைப்புகள்

4 years of vivegam color palates cinematography

People looking for online information on Ajith Kumar, Siruthai Siva, Vetri, Vivegam will find this news story useful.