நீங்களும் அந்த நிகழ்ச்சியில கலந்துப்பீங்களா? இந்திய கிரிக்கெட் வீரரின் வைரலான பதில்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Mar 09, 2019 10:24 PM

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினிடம், ‘காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துப்பீங்களா?’ என ரசிகர் ஒருவர் ஆவலோடு கேட்ட கேள்விக்கு அஸ்வின் ஆச்சர்யப்படுத்தும் வகையில் பதில் அளித்துள்ளார்.

Cricketer Ashwin answers a question regarding coffee with karan show

கடந்த வெள்ளிக்கிழமை இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துவந்தார். அதில் கிரிக்கெட் மற்றும் அஸ்வினின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து வந்த அஸ்வினிடம் நீங்கள் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொள்வீர்களா என ஒரு ரசிகர் கேள்வி கேட்டார்.

முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல் ராகுல் இருவரும் கரண் ஜோஹர் நடத்திய காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியுள்ளனர். இதனைத்தொடர்ந்து பாண்டியா, கே.எல் ராகுல் இருவருக்கு எதிராக பலரும் கண்டணங்களை தெரிவித்தனர்.

இதனால் பிசிசிஐ நிர்வாகம் அவர்களை சஸ்பெண்ட் செய்தது. இந்த சர்ச்சை சம்பவத்துக்கு காரணமான காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்களா என அஸ்வினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அஸ்வின், ‘கண்டிப்பாக’ என பதில் அளித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

மேலும் டி20 போட்டிகளில் விளையாடுவீர்களா என கேட்டதற்கு, தினமும் தன்னை மேம்படுத்திக்கொண்டு இருப்பதாகவும் மற்றவை எதுவும் தன் கையில் இல்லை என்று பதிலளித்துள்ளார்.

Tags : #COFFEEWITHKARAN #CRICKET