‘எந்நேரமும் இந்திய ராணுவ வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்’: உள்துறை அமைச்சர்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Feb 27, 2019 12:48 PM

இந்திய ராணுவ வீரர்கள் முகாமிட்டிருந்த காஷ்மீரின் போர் நிறுத்த ஒப்பந்த பகுதிகளான  நவ்சேரா-ரஜோர் உள்ளிட்ட 4 பகுதிகளில் , அத்துமீறி குண்டு வீசிய பாகிஸ்தானின் F-16 ரக போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதாகவும் அந்த விமானங்கள் பள்ளத்தாக்கில் நொறுங்கி வீழ்ந்ததாகவும், விமானிகள் பாரசூட் மூலம் தப்பித்துச் சென்றுவிட்டதாகவும் இந்திய ராணுவம் கூறியுள்ளதாக ஏஎன்ஐ அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது.

india and pakistan claims airstrike across the line of control-bizarre

அதே சமயம் இந்த குண்டுவீச்சில் உயிர் சேதம் இல்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.  இதனால் ஜம்மு, ஸ்ரீநகர், பதான்கோட் மற்றும் லே விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் கட்டுப்பாட்டு எல்லை கோடு பகுதியில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த சமயத்தில், இந்த உத்தரவை மீறி பாகிஸ்தான் செயல்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியதை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ரா உளவுப் பிரிவுத் தலைவர், தேசிய பாதுகாப்பு ஆலோசர், வெளியுறவு செயலர் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து எந்நேரமும் இந்திய ராணுவ வீரர்கள் எல்லையில் தாக்குதல்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 

இதனிடையே, தங்கள் நாட்டு பொதுமக்களை காக்கவும், தங்களது தற்காப்புக்காகவும் பாகிஸ்தானில் வைத்து இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல் கூறியுள்ளார். பாகிஸ்தானின் இந்த செய்தியில் உண்மை இல்லை என இந்திய ராணுவம் மறுத்துள்ளது.

Tags : #INDIANAIRFORCE #PAKISTAN #PULWAMAATTACK