'சத்தியமா கறி கொழம்பு வாசம் வந்துச்சு'...போர்க்களமான கல்யாண வீடு...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Feb 27, 2019 12:45 PM

திருமண வீடு என்றாலே நிச்சயம் சிறு சிறு கலாட்டாக்கள் இருக்கத்தான் செய்யும்.ஆனால் ஆட்டு கறி போடாமல் கோழி கறி போட்டதிற்காக திருமண வீடு போர்க்களமாக சம்பவம்,தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது

Mutton curry strikes at a wedding in Telangana

தெலங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டத்தில் பிரவீன், அஜ்மீரா என்ற தம்பதியருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்தினர்.இதையடுத்து திருமணத்திற்கு வந்தவர்களுக்கு திருமண விருந்து பரிமாறப்பட்டது.அப்போதுதான் பிரச்சனையே ஆரம்பித்தது.

திருமணத்திற்கு வந்திருந்த மணமகன் வீட்டை சேர்ந்த சில இளைஞர்கள் மது போதையில் இருந்துள்ளார்கள்.அப்போது பரிமாறப்பட்ட விருந்தில்,ஆட்டுக்கறி ஏன் பரிமாறவில்லை என மணமகள் வீட்டாரிடம் கேட்டு வாக்குவாதம் செய்தனர்.அதற்கு போதிய பணம் இல்லாததால் ஆட்டுக்கறிக்கு பதில் கோழிக்கறி விருந்து போட்டோம் என்று மணமகள் வீட்டார் தெரிவித்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த அந்த இளைஞர்கள் மணமகள் வீட்டாருடன் தீவிர வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

திடீரென சில இளைஞர்கள் உணவு பரிமாறுவதற்காக போடப்பட்டிருந்த பந்தலில் கட்டைகளை பிடுங்கியும்,  நாற்காலிகளை வீசியும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.இதனால் திருமண வீடு போர்க்களமாக மாறியது.இதனிடையே தாக்குதலில் காயம் அடைந்த இரு வீட்டாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.மகிழ்ச்சியாக முடிந்திருக்க வேண்டிய திருமண வீடு சிலருடைய தவறினால்,அடிதடியில் முடிந்தது தான் வேதனையான விஷயம்.

.

Tags : #TELANGANA #WEDDING #MUTTON CURRY